März 28, 2024

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்திய முன்னணி!

உலகம் முழுவதும் 200க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த வைரசை தடுப்பதற்கான மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ரஷ்யா அந்த முயற்சியில் முன்னணியில் உள்ளது.இந் நிலையில், தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: தடுப்பு மருந்து விவகாரத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு உலக நாடுகளுக்கு தேவை.

தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த மருந்து அடுத்த ஆண்டு இந்தியாவில் அதிகளவு உற்பத்தி செய்யும். இந்தியாவில் தடுப்பு மருந்து உருவாக வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.

அந்த மருந்து பாதுகாப்பானதாகவும், உற்பத்தி செய்யும் போது,  அதிகளவிலும் இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பல்வேறு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என்று கூறினார்.