März 29, 2024

மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ள ரணில்?

இம்முறை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் மூலம் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், எதிர்வரும் 4 ஆம் திகதி கட்சியின் சகல பதவிக்கும் புதியவர்களை நியமிக்கக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் குறித்து தயா கமகே, ரவி கருணநாயக்க, வஜிர அபேவர்தன மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோருக்கு இடையே கட்சியின் தலைமைத்துவத்திற்காக கடும் போட்டி ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

​​இதேவேளை, கட்சி தீர்மானிக்குமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தான் தயாராகவுள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.