März 29, 2024

பங்காளிகளிற்கு அல்வா: தமிழரசு தனிப்பாதை?

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் நடப்பவை தொடர்பில் பங்காளி கட்சிகள் மற்றும் ஆதரவாளர்கள் அவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மத்திய செயற்குழு கூட்ட அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டமைப்பின் தேசியப்பட்;டியல் விவகாரம் முக்கிய விடயத்தை பெற்றுள்ளது.

இதனிடைடயே பேச்சாளர் பதவி,கொரடா பதவியென பங்காளிகள் காத்திருக்க ‚தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அமைப்பினருக்கு சில கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், கூட்டமைப்பிலிருந்து  அவர்கள் வெளியேறுவார்கள் என நான் நம்பவில்லை. கூட்டமைப்புக்குள்  பிரிவினை ஏற்படாவண்ணம் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடு இணைந்து   நட்புறவோடு பயணிக்கும்‘ என சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழரசுக்கட்சி  கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சி,  முதன்மையான கட்சியும் கூட. ஏனைய கட்சிகளை அரவணைத்து அவர்களோடு கலந்து பேசி கருத்துப் பகிர்வுடன் செயற்படவேண்டிய தேவை எங்களுக்குள்ளது. அந்தப் பொறுப்பும் இருக்கின்றது.

ஆகவே, அந்த பொறுப்போடுதான் தமிழரசுக்கட்சி செயற்படும். என்னைப் பொறுத்தவரைக்கும் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அமைப்பினருக்கு சில கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், கூட்டமைப்பிலிருந்து  அவர்கள் வெளியேறுவார்கள் என நான் நம்பவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளராக சீ.வீ.கே.சிவஞானம் தெரிவாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.