September 6, 2024

கிம் இன் சகோதரி திடீர் மாயம்!

 

வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக உலாவந்த அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோங் உன் திடீரென மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக குறிப்பிடப்படுவர் கிம் யோங் உன். அதிபரின் சொந்த சகோதரியான இவர், நாட்டின் நிர்வாகத்தில் முக்கியப் பங்காற்றுகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த தகவல்கள் பரவும்போதெல்லாம் இவர் வெளிச்சத்திற்கு வருவார். மேலும், அதிபரின் அடுத்த அரசியல் வாரிசு என்றும்கூட இவரைப் பற்றி செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில், தற்போது இவர் திடீரென மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை 27 முதல் இவர் பொது நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை மற்றும் ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த பொலிட்பியூரோ கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்பதால், இவரைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.