September 13, 2024

எளிமை ஜனாதிபதி ஹெலிகாப்டர் பயணம்?

 

ஸ்மார்ட் ஆளுகை பற்றி பேசி வருகின்ற இலங்கையின் எளிமையான ஜனாதிபதி ஹெலிகாப்டர் மூலம் இலங்கைக்குள் இறங்க வேண்டியிருந்தமை தொடர்பில் அம்பலமாகியுள்ளது. மேலும் அமைச்சரவை அமைச்சர்கள், இரண்டு மாவட்டங்களின் எம்.பி.க்கள் மற்றும் அவரது பாதுகாப்பு பிரிவினரென அனைவரும் இப்பயணத்தில் இணைந்துள்ளனர்.

நெடுஞ்சாலை அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரா, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பதிரானா, அமைச்சர் சிபிபி ரத்நாயக்க, மாகாண ஆளுநர் வில்லி கமகே மற்றும் பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

எளிமையாக பாராளுமன்றத்திற்கு ஒரு காரில் வருகை தந்திருந்த கோத்தாபாய பற்றி அவரது ஆதரவாளர்கள் புளங்காகிதமடைய இன்று கொழும்பிற்கு அருகாகவுள்ள இடமொன்றிற்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் பயணித்தமை அம்பலமாகியுள்ளது.