September 13, 2024

சுமந்திரன் ஓய்வு பெறுவது நல்லது?

அண்மைய தேர்தல் முடிவு அடுத்த தந்தை செல்வா ஆக முயற்சித்தவருக்கு யாழ் மக்கள் கொடுத்த மரண அடியென கருத்து வெளியிட்டுள்ளார் வலை பதியுனர் ஒருவர்.

மேலும் அவர் விபரிக்கையில் கடந்த 8ஆவது நாடாளுமன்றதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 பிரதிநிதிகள் இருந்தாலும் அவர்களில் ஆங்கில மற்றும் சிங்கள புலமையாளர்களாக அல்லது மும்மொழியிலும் சரளமாக பணியாற்றக்கூடியவர்களாக இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே இருந்தனர்.

இவர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் தமிழர்கள் சார்பில் ஆங்கிலத்தில் மற்றும் சிங்களத்தில் நிகழ்த்திய உரைகள் கூர்ந்து அவதானிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரைகள். கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக வேறு அவர் இருந்தமையின் காரணமாக ஊடகங்களிலும் அவருடைய பெயர் தாறுமாறாக அடிபட்டது. இதன் காரணமாக எம்.ஏ.சுமந்திரன் தமிழ் மக்களின் தவிர்க்கமுடியாத அரசியல்வாதியென்று ஒரு போலியான மாயை உருவாகியது. இதனால் பொதுவெளியில் உள்ள சிலர், சுயாதீன ஊடகவியலாளர்கள், ரணில் மற்றும் மகிந்த ஆகியோரின தமிழ் விசுவாசிகள் எல்லோருமே, கூட்டமைப்பின் அடுத்த தலைவர் ஆகுவதற்குரிய அனைத்துத் தகுதிகளும் சுமந்திரனுக்கே இருப்பதாகவும் அவர் தமிழ் மக்களின் தவிர்க்க முடியாத தலைவர் எனவும் கதைக்கவும் எழுதவும் தொடங்கினர்.

‚குறிப்பிட்ட‘ திருச்சபையின் பேராயர் ஒரு படி மேலேபோய் அடுத்த தந்தை செல்வா சுமந்திரன் தான் என்பது போன்ற ஒரு மாயையை தனது திருச்சபை சூழலில் மட்டுமன்றி தமிழ் மக்களிடையேயும் தோற்றுவிக்க முயன்றார்.