September 13, 2024

எளிமையாக பொறுப்பேற்ற சற்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று (28) காலை மிக எளிமையாகத் தனது தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளைத் தொடரந்து, பீடாதிபதிகள், பல்கலைக்கழகப் பதிவாளர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்களால் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.