April 24, 2024

மீண்டும் அங்கயன் தரப்பு ஆட்டம்?

அங்கயன் இராமநாதன் ஆட்சி கதிரையேறி சில நாட்களுள் பாடாசாலை

ஒன்றின் ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் கோரும் பரிதாபம் நடந்துள்ளது.

அச்செழு பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நிர்வாகத்தில் அரசியல் கட்சியொன்றின் தலையீடு காரணமாக அங்கு கல்வி கற்பிக்கும் சுமார் 18 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் வழங்குமாறு யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் விண்ணப்பித்துள்ளதாக அறியமுடிகிறது .

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் அதிபராக இருந்தவரை மாற்றி பிரதி அதிபரை அதிபராக தருமாறு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழில் போட்டியிட்ட அங்கயன் இராமநாதனிடம்; அப்பாடசாலை விருத்திச் சங்கம் சார்பில் ஒருவர் நாடியுள்ளார் .

இவ்வாறு தமது கோரிக்கையை குறித்த காட்சி  ஏற்கும் ஆனால் தமது கிராமத்தில் கணிசமான வாக்குகளை அவரது கட்சிக்கு தருவதாக பேரம் பேசப்பட்டதிற்கினங்க  உத்தரவாதம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

அதனடிப்படையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுற்ற நிலையில் அதிபர் மாற்றப்பட்டுள்ளது. அங்கு கடமையாற்றும் பிரதி அதிபர் தானே அதிபர் என்ற நினைப்புடன் ஆசிரியர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் என ஆசிரியர் தரப்பால் கவலை தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பிரதி அதிபர் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் அப்பாடசாலையில் விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரிதொரு அரசியல்வாதியிடம் சுமார் 5 இலட்சம் ரூபா வரையான நிதியை பெற்று பாடசாலை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டு வந்தது.

இந் நடவடிக்கை முறையாக இடம்பெறாமல் குறித்த நிதி பிரதி அதிபர் மற்றும் கட்சி சார்ந்த ஆதரவாளர்களால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிதிக்கு என்ன இடம்பெற்றது என்பது குறித்து அறிய முடியாதுள்ளது  நிலையில்  குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் குறித்த பிரதி அதிபரின் சர்வாதிகார மான செயற்பாட்டுக்கு ஆளாகிய நிலையில் குறித்த பாடசாலையில் இருந்து விடுவித்து தருமாறு வலயக்கல்விப் பணிமனையை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.

எழுத்து மூலம் இரு தடவைகளுக்கு மேல் தமது இடமாற்றத்தை கோரியதுடன்  இச்சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த வலயக்கல்விப் பணிப்பாளர் குறித்த பிரதி அதிபரை பிறிதொரு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கினார் .

ஆனால் குறித்த பிரதி அதிபர் அரசியல் கட்சியொன்றின் பின்புலத்தில் தனக்கான இடமாற்றத்தை நிறுத்துவதற்கான கைங்கரியத்தை மேற்கொண்டு வருவதுடன் வழங்கிய இடமாற்றத்தை ஏற்காமல் அதே பாடசாலையில் கடமையாற்றுகிறார் .

இதன் காரணமாக குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளதுடன் தமது கற்பித்தல் செயலபாடுகளை  சரியாக முன்னெடுக்க முடியாதுள்ளனர்.

ஆகவே தமக்கு தொடர்ச்சியாக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தை நாடா உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது .

குறித்த விடயம் தொடர்பில் யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சந்திர ராஜாவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்கவில்லை.