März 29, 2024

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் நீடிப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). டெல்லியில் உள்ள ராணுவ ஆர்.ஆர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கோமா நிலையில் இருக்கும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு நுரையீரலிலும் தொற்று ஏற்பட்டு உள்ளது.

இன்று ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட தகவலில்:-

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, அவர் சுய நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையில் நீடிப்பதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரணாப்புக்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.