September 13, 2024

யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் வாள்களுடன் வந்த கும்பல் பெரும் அட்டகாசம்!

யாழ்பபாணம் – ஆணைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வீட்டின் மீது வாள்வெட்டுக் குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

தாக்குதலில், வீட்டின் முன்பாக நின்ற மோட்டார் சைக்கள் மற்றும் வீட்டு வாயிற்கதவு என்பன வாளால் வெட்டி துண்டாடப்பட்டுள்ளன. இன்று (28) காலை இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத வாள்வெட்டுக்குழுவினர் 3 மோட்டார் சைக்கிளில், 6 பேர் வாள்வளுடன் சென்று வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.

சம்பவம் தெடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்தாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்பபாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.