September 13, 2024

பிரித்தானியா பிரதமருக்கு இந்திய பெண் அனுப்பிய தற்கொலை கடிதம்!

பிரித்தானியா பிரதமருக்கு இந்திய பெண் அனுப்பிய தற்கொலை கடிதம்!

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அலுவலக மின்னஞ்சலுக்கு தான் மனம் உடைந்து போயிருப்பதாகவும், தனக்கு உதவவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மெயில் அனுப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அலுவலக மின்னஞ்சலுக்கு தான் மனம் உடைந்து போயிருப்பதாகவும், தனக்கு உதவவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மெயில் அனுப்பியுள்ளார்.

இதனால் போரிஸ் ஜோன்சனின் பிரதமர் அலுவலகம் உடனடியாக இந்திய தூரத்திற்கு அந்த மெயிலை அனுப்பியுள்ளது.

கடைசியாக ஒரு வீட்டை கண்டுபிடித்து பொலிசார், வீட்டின் கதவை தட்டிய போது, அந்த வீட்டின் உள்ளே இருந்த பெண் கதவை திறக்க மறுத்ததுடன், தயவு செய்து போய் விடுங்கள் என்று கத்தியுள்ளார்.

இதையடுத்து, டெல்லி தீயணைப்பு வீரர்களை அழைத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது, ஹாலில் அப்பெண் நின்றுள்ளார்.

வீடு பூனைகளின் கழிவுகளினால் நாற்றம் அடித்துள்ளது. வீட்டுக்குள் சுமார் 16 பூனைகள் இருந்துள்ளன. பொலிசாரை பார்த்தவுடன் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை பொலிசார் புரிந்து கொண்டனர், பெண் கான்ஸ்டபிளை அழைத்து அவரிடம் பேச வைத்த போது அந்தப்பெண் அழத்தொடங்கி விட்டார். விவாகரத்து பெற்று 10 ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்து வருகிறார்,

பூனைகள்தான் அவரது உலகமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லி முனிசிபாலிட்டி பள்ளியில் ஆசிரியையாக இருந்து 2-3 ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொலிசாரும் அவருக்கு உதவ மனநல மருத்துவர்களை அழைத்தனர், அந்தப் பெண்ணின் வீட்டை சுத்தம் செய்த உதவி அவரை குளிக்க வைத்து சாப்பிட வைத்துள்ளனர்.

பொலிசாரிடம், அவர், தான் பிரித்தானிய பிரதமருக்கு மெயில் அனுப்பக் காரணம் தன் கடன்களை அடைக்கவும், வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்கவும் உதவி கேட்டதாக தெரிவித்துள்ளார்.