September 13, 2024

சாவகச்சேரியில் கண்ணிவெடி?

டாங்கிகளை தகர்க்கக்கூடய குண்டு ஒன்று நுணாவில் சாவகச்சேரி பகுதியில் 27/8/2020 வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வீட்டு வளவொன்றில் குழி ஒன்றை வெட்ட முற்பட்ட போது சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று இருப்பதை அவதானித்த  சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது
சம்பவம் தொடர்பாக குறித்த பகுதியை பொலிஸ் கண்காணிப்பதுடன் போராட்ட காலத்தில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
வெடிக்காத நிலையில் இருக்கும் குண்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.