März 29, 2024

மேலும் நால்வர்:கோத்தா நியமனம்?

அரசியலமைப்பின் 33 வது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஓய்வு நிலை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்ன தலைமையில் நியமிக்கப்பட்டு இருந்த கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் பௌத்த மகா சங்கங்களை பிரதிநிதிவப்படுத்தி மேலும் 4 பிக்குகளை கோட்டாபய ராஜபக்சே நியமித்து இருக்கிறார்

1. அஸ்கிரியா பீடத்தை சேர்ந்த தர்மகீர்த்தி ஸ்ரீ ராதனபால உபாலி தேரர்
2. மல்வத்த பீடத்தை சேர்ந்த அம்பன்வாலே ஸ்ரீ சுமங்கல தேரர்
3. மல்வத்த பீடத்தை சேர்ந்த டாக்டர் பஹமுனே சுமங்கல நாயக்க தேரர்
4. அஸ்கிரிய பீடத்தை சேர்ந்த டாக்டர் வெனரபிள் மேதமக தமனா தேரர்

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்கள் பௌத்த மத பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை என்பதோடு அவை பௌத்த மத வழிபாட்டுத் தலங்களுடன் தொடர்புடையவை என்பதால், பௌத்த மகா சங்கத்தின் வழிகாட்டுதலும் அனுசரணையும் இந்த செயலணிக்கு தேவை என்பதன் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள் . ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் 2000 இற்கு மேற்பட்ட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக இந்த செயலணி அறிவித்து உள்ள சூழலில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன

.இவ்வாறான வரலாற்று ரீதியான ஆபத்தை கிழக்கு மாகாணம் எதிர் கொண்டு இருக்கும் இன்றைய சூழலை வெற்றி கொள்ளுவதில் தான் கிழக்கு மாகாண தமிழ் பேசும் சமூகத்தின் எதிர்கால இருப்பு தங்கி இருக்கிறது