April 20, 2024

சுவிஸ் விமான பயணிகளுக்கு இனி இந்த சான்றிதழ் கட்டாயம்: இறுகும் கட்டுப்பாடு

சுவிஸ் விமான பயணிகளுக்கு இனி இந்த சான்றிதழ் கட்டாயம்: இறுகும் கட்டுப்பாடு

சுவிஸ் விமான சேவை நிறுவனம் தங்கள் விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கியுள்ளது.

இதுவரை விமான பயணத்தின்போது பாதுகாப்பு கருதி மாஸ்க் அணிவதில் இருந்து விலக்களிக்க முறைப்படியல்லாத ஒரு மருத்துவ சான்றிதழ் போதுமானதாக இருந்தது.

ஆனால் அந்த முறையில் இருந்து புதிய கடுமையாக்கப்பட்ட விதிமுறைகளை சுவிஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் பயணிகள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

சான்றிதழானது பயணத்தின் 48 மணி நேரம் முன்பு வழங்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். கூடுதலாக, சான்றிதழ்கள் ஒரு படிவமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

திங்களன்று அறிவிக்கப்பட்ட இந்த புதிய கட்டுப்பாடானது, அனைத்து பயணிகளுக்கும் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகவே அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடானது, சுவிஸ் விமான சேவை நிறுவன குழுமத்தில் உள்ள Lufthansa, Austrian, Brussels மற்றும் Eurowings விமான சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.