September 7, 2024

பேரம் பேசாதீர்.

தள்ளாத
வயதினிலும்
நில்லாமல் இயங்கும்
தேவதை..
தன் தேவைகளை
தானே ஈடு செய்திடும்
வல்லமை பொருந்திய
மூதாட்டியிவள்..
ஈரமுள்ளோரே
இவர்களிடம்
பேரம் பேசாதீர்.
கறுப்புத் துணியால்
கண்களை கட்டாத
நீதி தேவதை.
யார்
தயவையும்
நம்பிடாத
தன்னம்பிக்கையின்
இலட்சிய
தேவதை.
பார்வை
மங்கிட தோல்
சுருங்கி
நிலை மாறிய போதும்
உழைக்கும்
ஓர்மம் நிறைந்த
தேவதையிவளை
வாழ்த்துவோம்.
ஆக்கம் கவியர் ரி.தயாநிதி