März 29, 2024

ஊடகப்பேச்சாளர் அடைக்கலநாதன் ?

கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழியப்பட்டுள்ளன என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு நடைபெற்றுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுகூடி ஆராய்ந்து தலைவர், கொறடா, ஊடக பேச்சாளர் போன்ற பதவி நிலைகளை தெரிவு செய்வது வழமை 2010ஆம் ஆண்டு ஊடக பேச்சாளராக சுரோஸ் பிரேமச்சந்திரனும், 2015 சுமந்திரனும் தெரிவு செய்யப்பட்டார்கள். 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பிற்பாடு நாடாளுமன்ற குழு இந்த தெரிவினை மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற குழு கூட்டப்படாத பட்சத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு நேற்று சம்பந்தன் தலைமையில் கூடி கொள்கையளவில் பிரதம கொறடாவாக சித்தார்த்தன் பெயரும், ஊடகப்பேச்சாளர் ஆக அடைக்கலநாதன் பெயரினையும் சம்மந்தன் முன்மொழிந்துள்ளார்.

இது எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற குழுகூடி அனுமதியினை பெற்றும் தொடர்ந்து ஐந்து வருடங்கள் பதவி நிலையில் தொடர்ந்து அங்கம் வகிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.