September 13, 2024

துயர் பகிர்தல் கலாநிதி.சின்னத்தம்பி குணசிங்கம்

கொழும்பு முகத்துவாரம்
சர்வார்த்த சித்திவிநாயகர்
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தர்மகர்த்தா
கலாநிதி.சின்னத்தம்பி குணசிங்கம் ஐயா 22.08.2020 சனிக்கிழமை 87வது அகவையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் 27 வருட காலமாக தன் வாழ்நாள் முழுவதும் ஆலய பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர். 2004ம் ஆண்டு பழமையாக இருந்த ஆலயத்தை பாலஷ்தாபனம் செய்து 2005ல் புதுப்பொலிவுடன் மஹாகும்பாபிஷேகத்தை நடாத்துவதற்கு அனுசரனையாளராக இருந்தார். நிறைவாக கடந்த 23.08.2018ல் புனருத்தாபனம் செய்து மஹாகும்பாபிஷேகத்தை நடாத்துவதற்கு முன் நின்று பணியாற்றியவர்.
திரு.குணசிங்கம் தாண் செய்த பூர்வ புண்ணிய பலன் காரணமாக தேவஸ்தான மஹோற்சவ தேர்திருவிழா ஆவணி விநாயக சதுர்த்தி தினத்தில் கைலாசபதவியை பெற்றுள்ளார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!