September 7, 2024

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க மஹிந்த விரும்புகிறார்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா….

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க விரும்புவதாக பிதமர் மஹிந்த ராஜபக்ச என்னிடம் கூறியிருக்கிறார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அவர் நேற்று (23) செய்தியாளர்களை சந்தித்தபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்தபோது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தான் சந்திக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச என்னிடம் கேட்டுள்ளார். தற்போது அமைந்துள்ளது பலமான அரசாங்கம் என்றாலும், அவர்கள் பதவியேற்று சில நாட்களே ஆவதால், இரண்டு மூன்று கிழமைகளின் பின்னர் இந்த விவகாரத்தை மீண்டும் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவேன்“என்றார்.