April 20, 2024

இலங்கையில் தூங்குவதற்கு சிறந்த இடமெது?

சொகுசு இடமெது என்றால் நாடாளுமன்றமே என்கின்றன சிங்கள ஊடகங்கள்.

நேற்றைய தினம் இலங்கையின் 9வது நாடாளுமன்ற அமர்வு ஆரம்ப நாளன்றே தமிழ் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூங்கி வழிந்தமை அம்பலமாகியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இம்முறை நாடாளுமன்றத்தில் உரையாற்ற குறைந்தளவு நேரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ள போதும் அதனை பொருட்படுத்தாது தூங்கி வழிவதில் சாதனை புரிந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்குத் தான் விவாதத்திற்கு அதிக நேரம் தரப்படுகிறது. எனினும், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என மனோ கணேசன் குறிப்பிட்டார்.

60-40 என்ற அடிப்படையில் 60 வீதம் எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும். இங்கு 60 வீதத்தை ஆளுங்கட்சி எடுத்துக்கொண்டுள்ளார்கள்.

ஜனநாயகம் கிடைக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிக்கு தான் விவாதம் செய்வதற்கு அதிக நேரம் கொடுக்கப்பட வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்தினார்.