September 13, 2024

கொரோனா தடுப்பூசி இலவசம்! ஆஸ்திரேலியப் பிரதமர்!

Scott Morrison was elected Australia's 30th prime minister on Friday.

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் கிடைக்கும் என  பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறினார்.தொடர்ந்து அவர் கூறுகையில்,

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை வெற்றி அடைந்தால், நாம் அதை உற்பத்தி செய்வோம். அதன்மூலம் நாமே வினியோகிக்கலாம். 2½ கோடி ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் என குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசிக்காக ஆஸ்திரேலியா போட்டுள்ள முதல் ஒப்பந்தம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.