April 24, 2024

சர்வாதிகார அரசாங்கம் ஒன்றை 5 ஆண்டுகளுக்கு எதிர்கொள்கின்றோம் – சுமந்திரன்

சுமந்திரன் கருத்து வெளியிடுகையில் பேரினவாதச் அரசியல் நெறியை ஒழுகும், சர்வாதிகாரப் போக்குடைய பலமான அரசாங்கமொன்றை நாம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கப் போகிறது. என பாராளுமன்றத்தின் கன்னியமர்வு உரையில் சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.இன்று நின்று நோக்கும் போது பலமிகு அரசாங்கங்கள் அசைக்கமுடியாதவையாகத் தோன்றினும் எதிர்காலம் எப்படி அமையும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அரசாங்கத்திற்கும் பல்வேறுபட்ட சவால்கள் காத்திருக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தை சுற்றுலாத்துறை, ஆடையுற்பத்தி, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் என அத்தனையும் முடக்கப்பட்ட நிலையில் மீட்டெடுப்பது என்பது இலகுவானதல்ல.

வரலாற்றை நோக்கினும் இந்த உண்மை புரியும். 2/3 பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்த ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசும் பின்னர் கவிழ்ந்தது. அவர்கள் கொண்டு வந்த அரசியல் யாப்பும், பின்னர் 1983 இல் நடந்த தமிழருக்கெதிரான கறுப்பு ஜூலை வன்முறையும் இலங்கை நாட்டை மிக மோசமான நிலைக்குத் தள்ளியது. ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் கட்சி இன்று ஒற்றை ஆசனத்துடனே பாராளுமன்றம் வருகிறது. இந்த நிலை ராஜபக்சக்களுக்கு நேரக் கூடாதெனின் அவர்கள் இனவாத மற்றும் ஜனநாயக விரோத செயல்களிலிருந்து விலகி நடக்க வேண்டும்.

எம் பக்கத்தில், தமிழ்த் தரப்போ பல கூறுகளாக உடைந்து போய் நிற்கிறது. எமக்கும் சவால் மிகு காலத்தில் இந்த நிலை துரதிஸ்ட வசமானது.

எண்ணிக்கையில் சிறிதான மக்கள் கூட்டங்கள் அனைத்தும் இணைந்து நிற்பது காலத்தின் கட்டாயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.