September 13, 2024

வைத்தியர் சிவரூபன் சிறையில் ஒருவருடமாக?

தேர்தல் காலத்தில் பேசப்படுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதுமாக தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமுள்ளது.

குறிப்பாக எவரையும் தமிழர் என்பதற்காக எவரையும் கைது செய்யவோ சிறையில் அடைத்து வைக்கவோ முடியுமென்பதற்கு கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் சிவரூபன் விவகாரம் நல்லதொரு உதாரணமாகியிருக்கின்றது.

பளை வைத்தியசாலை மருத்துவ அத்தியடசகர் சிவரூபன் கைது செய்யப்பட்டு கடந்த 18ம் திகதி செவ்வாய்கிழமையுடன் ஒரு வருடமாகியுள்ளது.

இது வரை வழக்கேதும் தாக்கல் செய்யப்படாத நிலையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

போலியான குற்றச்சாட்டு;க்களை முன்வைத்து கைதுகளை அரங்கேற்றிய அரசு தற்போதே சாட்சிகளை தேடிவருகின்றது.

இதனிடையே பொது மன்னிப்பு வழங்குவதற்கு தகுதிபெற்றுள்ள 902 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிறு குற்றங்களுடன் தொடர்புடையோருக்கே ஜனாதிபதியின் அனுமதியுடன் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

கைதிகள் மற்றும் அவர்களின் விடுதலை குறித்து ஆராய்வதற்காக அண்மையில் ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆயினும் இப்பட்டியலள் அரசியல் கைதிகள் எவருமில்லையென தகவல்கள் கிட்டியுள்ளது.