September 6, 2024

முதல் நாளே சுயநிர்ணய உரிமை கேட்ட சி.வி?

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கன்னி அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுள்ளதெனவும் ஆனால் கடந்த காலங்களில் இது கேள்விக்குறியாகவே இருந்ததாகவும் புதிய ஆட்சியிலாவது இந்த நிலைமை மாறியாகவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே முன்னெப்போதும் இல்லாதவாறு ஒருமுனைப்படுத்தப்பட்ட அங்கத்தவர்களை கொண்ட பாராளுமன்றாக இந்த 9 வது பாராளுமன்று விளங்குகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு முனைப்படுத்தப்பட்ட பாராளுமன்றில் மறுபக்கத்தில் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் எமக்கு மக்கள் அளித்துள்ள ஜனநாயக ஆணைக்குரிய மதிப்பையும் கௌரவத்தையும் கொடுத்து எமது மக்களின் ஜனநாயக ஆணை தொடர்பிலான நேர்மையான கலந்துரையாடல்களுக்கும் இடம் வழங்குகின்ற ஜனநாயாக விழுமியத்தை பேணுவதற்க்கான கடப்பாட்டை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் உங்களை கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.