பிள்ளையான் நல்லாட்சி மீது குற்றச்சாட்டு?

நல்லாட்சி அரசு தன்னை திட்டமிட்டு சிறையில் அடைத்திருப்பதாக நாடாளுமன்றில் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

தனது முதலாவது கன்னியுரையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலைப்புலிகளது தவறான போக்கினாலேயே தான் விலகியதாகவும் விளக்கமளித்துள்ளார்.

5 வருடங்கள் சிறை வாசம் அனுபவிப்பதாக தெரிவித்த அவர், மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார்.

சிறையில் உள்ளமையினால் நாடாளுமன்றத்திற்கு வரவேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இதனால் மக்களுக்கு சேவை செய்ய முடியாதுள்ளதாகவம் குறிப்பிட்டார்.