September 13, 2024

கூலி வேலை செய்த புத்தூர் வாசி மரணம்!

கூலி வேலையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தூர்

கலைமதி கிராமத்தை சேர்ந்த உ. சதிஸ் (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் பகுதியில் கூலி வேலையில் நேற்றைய தினம் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் மயக்கத்தை தெளிய வைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்ட போதிலும் அவர் மயக்கத்திலிருந்து மீளாததால் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் வைத்தியர்கள் அவர் உயிரிழந்து விட்டார் என உறுதிப்படுத்தியுள்ளனர். அதனை அடுத்து     மரண விசாரணை நடைபெற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.