März 29, 2024

இலங்கையில் திரும்பி வந்தது மின்சாரம்?

இலங்கை முழுவதும் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டிருந்த நிலையில் இரவு 9மணி க்கு பின்னராக சுமூகநிலை ஏற்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் 12:30 அளவில் இலங்கை முழுவதும் மின்சாரம் தடைபட்டது.

நாடு முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளமையினால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

மின்சாரம் தடைபட்டுள்ளமையினால் நாட்டின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைபட்டது.

வர்த்தக நிலையங்கள் வழமைக்கு மாறாக நேரகாலாத்துடன் மூடப்பட்டன.

அத்துடன், மின்சாரம் தடைபட்டுள்ளமையினால் வீதி சமிக்ஞை விளக்குகள் செயலிழந்திருந்தன.

நாடளாவிய ரீதியில் மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வத்தளை-கெரவலப்பிட்டி பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே குறித்த மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் நடவடிக்கையில் மின்சார சபை பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை வழமைக்கு திரும்புவதற்கு இரவு வரையில் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.