September 13, 2024

டக்ளஸின் வாதத்தினால் திணறிப்போன த.தே.ம. முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

இது சைக்கிள் கட்சியின் கொள்கை முரண்பாட்டினையும் சுயநலச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்கேற்றுள்ளனனர்.

இதில் இருவருக்கம் இடையில் காரசாரமான விவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் மேலும் பேசியதாவது,

குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , ஒற்றையாட்சியை நிராகரிப்பதாகவும் சமஷ்டி முறை அல்லாத எந்தவொரு விடயத்தினையும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக பரிசீலிக்கத் தயாராக இல்லை என்றும் தெரிவிக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளத் தயாராகி வருகின்றனர். இது சைக்கிள் கட்சியின் கொள்கை முரண்பாட்டினையும் சுயநலச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் தாய்க் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் அரசியல் யாப்பில் சுயாட்சியின் மெய்ப்பொருளை எந்தவொரு அரசியலமைப்பின் (ஒற்றையாட்சி அரசியலமைப்பாயினும் சரி) கீழும் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் பெற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருவதாகவும் எந்தவொரு இடத்திலும் சமஷ்டி வலியுறுத்தப்பாடாத நிலையில் குறித்த கட்சியின் பெயரிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தலை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போதைய ஒற்றையாட்சி அரசியலமைப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் பின்னர், தங்களுடைய அரசியல் எதிர்பார்ப்பை நோக்கி செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.