September 13, 2024

தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் கலையரசன்!

தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் கலையரசன்!

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்பதாக சட்டத்திற்கு உட்பட்டு தற்போதைய தவிசாளர் பதவியை சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடைந்தது மாத்திரமல்லாது தமிழ் பிரதிநிதித்துவமும் இழக்கப்பட்டிருந்தது.

இதனால் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தேசியபட்டியல் ஆசனத்தை பலத்த உட்கட்சி சர்ச்சைக்கு மத்தியில் கலையரசனுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.