September 13, 2024

ஒரே நாளில் 117பேர் பலி! தமிழகத்தை உலுப்பும் கொரோனா;

மிழகத்தில் 12வது நாளாக கொரோனாவால் பலியானவர்களின் சதத்தை கடந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், இன்று 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கொரோனா நோயாளிகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 837 பேருக்கு கொரோனா  உறுதியாகி இருக்கிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,14,260 ஆக தற்போது உள்ளது.

தமிழகத்தில் திருவள்ளூரை சேர்ந்த 29 வயது இளைஞர் உட்பட 117 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் மூலம் பலி எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது.

அதாவது பலியானவர்களின் விகிதம் 1.68 சதவீதமாகும். இன்று பலியானவர்களில் தனியார் மருத்துவமனையில் 34 பேரும், அரசு மருத்துவமனையில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.