September 13, 2024

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுமந்திரன் ஆகிறாரா சுகாஷ்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுமந்திரன் ஆகிறாரா சுகாஷ்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுமந்திரனாக அந்தக்கட்சியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ் உருவாகி வருகிறாரா என்ற கேள்வியை கட்சியின் சில மட்டத்தினர் எழுப்பியுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எம்.ஏ.சுமந்திரனின் சர்வ சக்தி ஊரறிந்தது. கட்சித் தலைவருக்கு தெரியாமலே, அவரை தேசியப்பட்டியலில் இருந்து அகற்ற நடவடிக்கையெடுத்திருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் க.சுகாஷூம் அப்படி சக்தி மிக்கவராக உருவாகி வருகிறார் என கட்சிக்குள் ஒரு தரப்பு எரிச்சலடைய தொடங்கியுள்ளது.

கட்சியிலிருந்து மணிவண்ணன் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் பின்னணியில் சுகாஷே இருந்ததாக தெரிகிறது. மணிவண்ணன்- சுகாஷ் மோதல் ஆரம்பித்தபோது, கட்சி தலைமை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமலிருப்பதை போல செற்பட்டு சுகாஷூக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும், மோதல் முற்றியபோது மணிவண்ணனை ஒதுக்கி சுகாஷிற்கு ஆதரவாக செயற்படுவதாக அந்த வட்டாரங்கள் அதிருப்தியடைந்துள்ளன.

இந்த விவகாரங்கள் குறித்து மணிவண்ணன் தரப்பு கட்சித்தலைமையுடன் பேசுவதற்கு சில முறை முயற்சித்தபோதும், தலைமை அசைந்து கொடுக்கவில்லையென தெரிய வருகிறது.