September 7, 2024

திரைத்துறையில் அதிக சம்பளம்! டுவைன் ஜோன்சன் என அறிவிப்பு

திரையுலகில் அதிக சம்பளம் பெறும் ஆண் நடிகராக டுவைன் ஜோன்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.முன்னாள் மல்யுத்த வீரரான டுவைன் ஜோன்சன் கடந்தாண்டு 1 ஜூன் 2019 முதல் நடப்பாண்டு 1 ஜூன் வரை 87.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (67 மில்லியன் பவுண்கள்) ஈட்டியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெட்ஃபிக்ஸ் த்ரில்லர் ரெட் நோட்டீஸுக்கு 23.5 மில்லின் அமொிக்க டொலர்களைப் பெற்றுள்ளார்.

இதேநேரம் உடற்பயிற்சி ஆடைகளைத் தயாரிக்கும் நிறுவனமான ப்ராஜெக்ட் ராக்கிடமிருந்தும் பணத்தை அவர் ஈட்டுகிறார்.

டுவைன் ஜோன்சனின் “ரெட் நோட்டீஸ்“ திரைப்படத்தின் துணை நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் 71.5 மில்லியன் டாலர் வருவாயுடன் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகராக இருக்கிறார்.

நடிகரும் தயாரிப்பாளருமான மார்க் வால்ல்பெர்க் 58 மில்லியன் டொலர்களை வருவாயாகப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

பென் அஃப்லெக் நான்காவது இடத்தையும் வின் டீசல் ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.

முதல் 10 இடங்களில் ஒரே பாலிவுட் நட்சத்திரம் தான் இந்திய நடிகர் அக்‌ஷய் குமார். அவர் 48.5 மில்லியன் டொலர் வருமானத்துடன் ஆறாவது இடத்தைப் பிடித்தார். இவ்வருமானங்களில் பெரும்பாலானவை தயாரிப்பு ஒப்புதல் ஒப்பந்தங்களிலிருந்து வந்ததாக ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது.