September 13, 2024

வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு

வழமைபோன்று ஊடகவியலாளரைச் சந்தித்துக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் சந்திப்பின் நடுவே அதிகாரி ஒருவர் வந்து டிரம்பின் காதில் ஏதோ ஒரு விடயத்தைக் கூற அவர் செய்தியாளர் சந்திப்பு அறையிலிருந்து இடைநடுவே வெளியேறினார்.பல நிமிடங்களின் பின்னர் செய்தியாளர் அறைக்கு வந்த அமெரிக்க அதிபர் செய்தியாளர்களிடம் வெள்ளைமாளிக்கைக்கு வெளியே ஆயுதம் வைத்திருந்த நபர் ஒருவரை இரகசிய பாதுகாப்புச் சேவைப் பிரிவினர் சுட்டதாகக் கூறினார்.

குறித்த ஆயுததாரி காயங்களுடன் மருத்துவமனைக்குச் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.