April 20, 2024

சாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்?

இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்

நீக்கப்படவுள்ளனர்.மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி தலைமையகத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவரிற்கு தெரியாமல், பங்காளி கட்சிகளின் தலைவர்களிற்கு தெரியாமல், இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர், கட்சித்தலைமைக்கு எதிரான சதி நடவடிக்கையாக தேசியப்பட்டியல் எம்.பியை தீர்மானித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நியமனத்தை மாவை சேனாதிராசாவிற்கு வழங்கலாம் என பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பொ.கனகசபாபதி ஆகியோர் நேற்று இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து, மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் நியமனத்தை வழங்கும்படி வலியுறுத்தினர்.

இதேவேளை,மாவை சேனாதிராசாவை அரங்கிலிருந்து அகற்றி தலைமையை கைப்பற்றும் சதி நடவடிக்கையில் சுமந்திரன்- சிறிதரன் இணை ஈடுபட்டுள்ளது. இதன்படி, நேற்றிரவு திருகோணமலைக்கு சென்ற இருவரும், இரா.சம்பந்தனுடன் பேசி, செயலாளர் கி.துரைராசசிங்கத்தையும் அங்கு வரவழைத்தனர்.

இதை தொடர்ந்து, இன்று காலையில் த.கலையரசனிற்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டது.

மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற இன்று தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட கிளை கூட்டம் கூடியது. எனினும், இதற்கு முன்னதாகவே, கலையரசனிற்கு நியமனத்தை வழங்கினர் சுமந்திரன், சிறிதரன் கூட்டு.

இத்தகைய குழப்பத்தையடுத்து அவர்களை கட்சியிலிருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.