September 13, 2024

வனிதா விஜயகுமார் மீது புகார் அளித்த லட்சுமி, ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு

லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதா விஜயகுமார், கஸ்தூரி மூவருக்குமான பிரச்சனைகள் எப்போது தான் முடிவடையுமோ என ரசிகர்களே கேட்குமளவுக்கு டுவிட்கள் நீண்டு கொண்டிருக்கின்றன.

பிரபல சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா விஜயகுமார் தரக்குறைவாக பேச சமூகவலைத்தளமே பரபரப்பானது.

இதனையடுத்து வனிதா விஜயகுமார் மீது புகார் அளித்த லட்சுமி, ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்ததாராம்.

இதை டுவிட் செய்த வனிதா விஜயகுமார், தானும் பதிலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டதாக தெரிவித்தார்.

இதுபற்றி டுவிட் செய்த கஸ்தூரி, லட்சுமி மேடம் உங்களுக்கு நோட்டீஸ் ஏதாவது வந்ததா? கடந்த வாரம் என் மீது புகார் அளித்திருப்பதாக கூறினார்கள், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என பதிவிட்டிருந்தார்.

அடுத்தசில மணிநேரங்களில், லட்சுமி மேடமுக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லையாம் என டுவிட் செய்தார்.

மேலும் பொதுவெளியில் இதைபற்றி கேள்விப்பட்டதால் தான் தானும் டுவிட்டரில் கேட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவருக்கு பதிலளித்த வனிதா விஜயகுமார், 2 நிமிஷத்துக்கு ஒருமுறை கஸ்தூரி தான் பேசியதை மறந்துபோய்விடுவார் என்றும், தனியாக வசிப்பதால் தான் இந்த பிரச்சனை எனவும் டுவீட்டியுள்ளார்.