September 13, 2024

சிறீதரன் -சந்திரகுமார் ஆதரவாளர்கள் போட்டுப்பிடிப்பு?

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான சந்தை வர்த்தகர் ஒருவர் உட்பட ஐவர் நேற்றிரவு (04) பொலீஸ்,தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய் கிழமை நள்ளிரவு குறித்த நால்வரும் மதுபோதையில் சந்திரகுமார் தரப்பின் சுயேச்சைக் குழு செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டிற்கு கற்களால் எறிந்தும் வேலிகளை அடித்து உடைத்தும்  அட்டக்காசம் புரிந்துள்ளனர். சரமாரியான கற்கள் வீட்டிற்குள் வீசப்பட்டதனால் அச்சமடைந்த குழந்தைகள் பெண்கள் தலைக் கவசகம் அணிந்தபடி பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க வீட்டுரிமையாளர் உடனடியாக பொலீஸ் மற்றும் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுக்கு அறிவிக்க உடனடியாக அங்கு விரைந்த பொலீஸ் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்தில் மதுபோதையில் நின்ற நால்வரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறிவர்த்தகர் மற்றும் சிவஞானம் சிறிதரன் அவர்களின் கையாளும் ஆன ஜெயக்குமார் என்பவராலே இவ்வாறு அடாவடித்தனம் மேற்கொண்டுள்ளார்.