September 13, 2024

பிரான்ஸ் நாட்டில் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு

பிரான்ஸ் நாட்டில் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு -பெரும் துயரத்தில் குடும்பம்

பிரான்ஸ் நாட்டில் பல்கலைக்கழக சக நண்பிகளுடன் நீராட சென்ற ஈழத்தை பூர்வீகமாக கொண்ட மாணவி ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

அந்த நாட்டின் பல்கலைக்கழகத்துக்கு புதுமுக மாணவியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து சக மாணவிகளுடன் கடலில் நீராட சென்ற போது குறித்த தமிழ் மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உயிரிழந்தநிலையில் ஏனைய மாணவிகள் உயிர் ஆபத்து இன்றி தம்பியுள்ளனர்

சம்பவத்தில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியை பூர்வீகமாக கொண்ட இரஞ்சன் அனித்திரா (வயது 19 ) என்ற மாணவியை உயிரிழந்தவர் ஆவார் இவரின் உயிரிழப்பு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது