März 29, 2024

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பது எப்படி தெரியுமா?

கொலஸ்ட்ரால் நமது உடலில் தேவையில்லாத ஒன்று மற்றும் பல நோய்களை உண்டாக்கக்கூடியது.

நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற பெரிய பிரச்சனைகளில் கொண்டு விட்டு விடும்.

நல்ல உணவு முறைகளின் மூலம் இதனை நாம் சரி செய்யலாம். கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.

தற்போது திடீர் மாரடைப்பை உண்டாக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க என்னென்ன உணவுகளை சாப்பிடுவது என இங்கு பார்ப்போம்.

  • கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் கைக்குத்தல் அரிசி சாதத்தை உட்கொள்வது மிகவும் நல்லது.
  • தினமும் காலையில் ஆவியில் வேக வைத்த ஸ்வீட் கார்னில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி சாப்பிட்டு வந்தால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவும் குறையும். வேண்டுமானால், ஸ்வீட் கார்னை காலை உணவாகவும் உட்கொள்ளலாம்.
  • 50 கிராம் கருஞ்சீரகம் மற்றும் 50 கிராம் வெள்ளை சீரகத்தை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அவற்றை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 கிராம் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 2 முறை குடித்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரையும்.
  • அல்பால்ஃபா பருப்புக்களை நீரில் ஊற வைத்து, பின் அதை ஒரு ஈரமான துணியில் கட்டி முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு இயற்கையாக குறையும்.
  • ஒரு டம்ளர் நீரில் ஒரு எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். குறிப்பாக இதற்கு பயன்படுத்தும் நீரானது சுடுநீராக இருக்க வேண்டும். இதனால் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து வெளியேறும்.
  • வால்நட்ஸ் மற்றும் சோயா பீன்ஸை வாரத்திற்கு 3 முறை என 2 மாதம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக கரையும். அதோடு, இது தமனிகளின் திறனை மேம்படுத்துவதுடன், மாரடைப்பு ஏற்படுத்தும் கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும்.
  • கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஆப்பிள் சாறு கலந்த ஆரஞ்சு ஜூஸைக் குடிப்பது நல்லது. இது உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும் திறன் கொண்டது.
  • தினமும் ஒரு கப் யோகர்ட் சாப்பிடுங்கள். தினமும் இவ்வாறு உட்கொள்வதன் மூலும், இதயம் சம்பந்தமான பிரச்சனைகளின் அபாயம் குறையும்.
  • ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்த மீன் போன்ற உணவுகளை உண்பது கொழுப்புக்களைக் குறைக்க உதவும். ஏனெனில் இந்த அமிலம் கெட்ட கொலஸ்ட்ராலின் உற்பத்தியைத் தடுக்க உதவுகிறது.
  • மீன் சாப்பிட முடியாவிட்டால், மீன் எண்ணெய் கேப்ஸ்யூல்களை அல்லது ஆளி விதை போன்றவற்றை உட்கொள்ளலாம்.
  • ஒரு டம்ளர் பாலில் 2-3 பற்கள் பூண்டு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அந்த பாலை வாரத்திற்கு 2-3 முறை குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.