April 16, 2024

கொரோனாவால் நாட்டில் 5 மாதமாக மூடப்பட்ட பள்ளிகள்! கர்ப்பமான 7000 மாணவிகள்.. அதிர்ச்சி தகவல்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான Malawi-ல் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில் 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் பல மாணவிகள் வயது 10ல் இருந்து 14 வயதுக்குள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டது.

இதன்பின்னரே மாணவிகள், சிறுமிகள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளது.

Phalombe நகரில் மட்டும் இந்த காலக்கட்டத்தில் 1000 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர்.

கல்வி தொடர்பான சிவில் சொசைட்டி கூட்டணியின் இயக்குனர் Benedicto Kondowe கூறுகையில், கொரோனா தொற்றுநோய் நாட்டின் இளம் பெண்களின் வாழ்க்கையை மோசமாக பாதித்துள்ளது.

மேலும் இந்த காலகட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை, சுரண்டல் மற்றும் இளம் பருவ சிறுமிகளுக்கு எதிரான பிற வகையான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன என கவலை தெரிவித்துள்ளார்.

Malawi நாட்டில் இதுவரை 3,700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.