April 20, 2024

கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் அரசுக்கு ஆதரவு?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த 16 உறுப்பினர்களும் கடந்த 28ம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகால மோதல் காரணமாக வடக்கு கிழக்கு பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தனது சொந்த நலன்களைக் கவனித்து வருவதாகவும் அந்த 16 உறுப்பினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொழும்புக்கு செல்வதற்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தந்திரோபாயங்கள் எனவும், மீண்டும் தேர்தல்கள் நெருங்கும் போது மட்டுமே அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதாகவும் அந்த 16 பேரும் கூறியுள்ளனர்.

அண்மைய காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களின் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், ஆகையினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆரவு வழங்க குறித்த உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.