September 13, 2024

அமலா பாலின் வேலையை கண்டு, ரசிகர்கள் கமெண்ட்.!

தனது ஆரம்ப காலம் முதலே, தமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்கு சொந்தமான நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை அமலா பால். தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், அடுத்தடுத்து சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வர துவங்கிவிட்டார்.

இதற்கு நடுவில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய்யை அவர் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான மூன்று வருடத்திற்குள் அந்த உறவானது முடிவுக்கு வந்தது.

பின்னர் இருவரும் முறையாக விவாகரத்து பெற்று, தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து அவருடைய முன்னாள் கணவருக்கு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி குழந்தையும் பிறந்துள்ளது. அமலாபால் அதன் பின்னர், சினிமாவில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சமீபத்தில் அவர் நடித்த ஆடை படம் கூட மிகுந்த சவாலானது என்று அனைவராலும் பாராட்டப்பட்டது. அவருக்கும் காதல் கல்யாணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து, மிகவும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில், தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குதிரை வண்டியில் குழந்தைபோல் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “உங்களுக்கு உள்ளே இருக்கும் குழந்தையை மீண்டும் உயிர்த்தெழுங்கள் அப்பொழுதுதான் நீங்கள் மகிழ்ச்சியை உணர முடியும். அப்பொழுதுதான் நீங்கள் அனைத்து நேரங்களிலும் உண்மையான நிம்மதியைப் பெற முடியும்.” என்று தத்துவம் தெரிவித்துள்ளார்.