September 13, 2024

சின்னத்திரையில் இதுவரை எந்த ஒரு நடிகையும் செய்யாத சாதனையை செய்த நடிகை ராதிகா! குவியும் வாழ்த்துக்கள்…

நடிகை ராதிகா திரையுலகுக்கு வந்து சுமார் நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன.

வெற்றிகரமாக கிழக்கே போன ரயில், இந்த நாற்பதாண்டுகளில் அரசியல், சினிமா, சின்னத்திரை என்று சகல திசைகளிலும் பயணம் செய்துள்ளது.

வாணி-ராணி தொடரில் இரட்டை வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த ராதிகா தற்போது `சந்திரகுமாரி’ சீரியலில் வரலாற்று நாயகியாகப் புது அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நதிநிலையில் நடிகை ராதிகா இதுவரை 6850 எபிசோட்களிலும், 3430 மணி நேரம் நடித்துள்ளாராம்.

ராதிகா இடையில் இதுவரை 2 மாதம் மட்டுமே பிரேக் எடுத்துள்ளாராம் . இதுவரை எந்த ஒரு நடிகையும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை என்பதால் ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.