April 24, 2024

உலகின் மிக சக்திவாய்ந்த போர் விமானமாக கருதப்படும் ‚ரஃபேல்‘ போர் விமானங்களை ஃபிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்குகிறது இந்தியா.

உலகின் மிக சக்திவாய்ந்த போர் விமானமாக கருதப்படும் ‚ரஃபேல்‘ போர் விமானங்களை ஃபிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்குகிறது இந்தியா.

முதற்கட்டமாக 5 ரஃபேல் விமானங்கள் நேற்று ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டன.

7000 கி.மீ தூரத்தை கடந்து இந்தியாவிற்கு வந்தாக வேண்டும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3500 கி.மீ தூரம்வரை இந்த விமானத்தால் நிற்காமல் செல்ல முடியும்.

நடு வானில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதி ரஃபேல் விமானங்களில் உண்டு. அந்த சோதனை முயற்சி வெற்றியடைந்தது.

விமானிகளின் ஓய்விற்காகவும், எரிபொருள் நிரப்பவும் இந்த 5 ரஃபேல் விமானங்களும் நேற்றிரவு அபுதாபி அல் தாஃப்ரா விமான நிலையத்தை வந்தடைந்தன.

நாளை இந்த 5 ரஃபேல் விமானங்களும் இந்தியா சென்றடையும்.

தற்போது இந்திய விமானப்படையிலிருக்கும் சக்தி வாய்ந்த போர் விமானங்கள் ரஷ்ய தயாரிப்பான ‚சுகோய்‘ ரக போர் விமானங்கள்தான்.

1 ரஃபேல் ஜெட் = 2 சுகோய் விமானங்களுக்கு சமமானது.