September 13, 2024

தமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறிந்த இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்.!

ராஜீவ் காந்தி , ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உடன்படிக்கை:

தமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறியும் நோக்கோடு 29.07.1987 அன்று ராஜீவ் காந்தியும்ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர். இவ்உடன்படிக்கையின்விளைவாக 8000 தமிழர்கள் வரை கொல்லப்பட்டனர்.

 

1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் தமிழீழ மக்களின் ஒப்புதல் இன்றி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்புதல் இன்றி, தமிழீழ மக்களின் விடுதலையே தன் உயிர்மூச்சு என்று சொல்லி தமிழீழ விடுதலைப் போரை வழிநடத்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் ஒப்புதல் இன்றி அவரை டில்லியில் ஹொட்டலில் பூட்டி வைத்துவிட்டு, பிராந்திய வல்லரசு என்ற இறுமாப்புடன் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சிறீலங்காப் பிரதமர் ஜெ.ஆர். ஜெயவர்த்தனாவுடன் இந்தியாவின் பூகோள நலனுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இந்திய இராணுவம் தமிழீழப் பகுதிகளுக்கு ‘அதிரடிப்படை” என்ற பெயரில் அனுப்பப்பட்டது.

ஒப்பந்தம் செய்துவிட்டு இந்தியா திரும்பிய இந்தியப்பிரதமர் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துச் சில உறுதிமொழிகளை அளித்தார். இந்த உறுதி மொழிகளைப் பெற்றுக் கொண்ட தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பினார்.