April 23, 2024

தமிழ் ஆசிரிய சங்கம்:தேர்தல் கடமையில் இல்லை!

பொதுத்தேர்தலில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கூட்டமைப்பினை ஆதரித்துள்ள நிலையில் அதன் செயலாளர் சரா.புவனேஸ்வரத்தின் மோசடிகள் விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே தமிழர் ஆசிரிய சங்க பிரமுகர்களை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தக் கூடாதென ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் ஆசிரியர்கள் சிலர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதுடன், அந்த சங்கத்தின் ஆதரவு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே என பகிரங்கமாக அறிவித்துள்ளதை தொடர்ந்து, அந்த சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கூட்டாக இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
சங்கத்தின் தலைவர் வேட்பாளராகவும், அவர் போட்டியிடும் கட்சியை ஆதரிப்பதாக சங்கம் அறிவித்துள்ள நிலையிலும், சங்கத்தில் அங்கம் வகிப்பவர்களை தேர்தல் கடமையில் ஈடுபடுத்துவது, தேர்தல் விதிமீறலாக அமையும் என அந்த கடிதத்தில் குறிப்பிடபபட்டுள்ளது.
ஜனநாயகரீதியிலான தேர்தல் நடைபெற வேண்டுமெனில், தேர்தல் கடமைகளில் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரமுகர்கள், தேர்தல் கடமையிலிருந்த விலக்கப்பட வேண்டுமென அதில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சரா.புவனேஸ்வரனின் முறைகேடுகள் விசாரணைக்கு வந்துள்ளது.
தற்போதைய கல்வி அமைச்சின் செயலாளரை தானே ஆளுநர் சுரேன் இராகவனுடன் பேசி நியமித்ததாக சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதனால் தனக்கு எதிராக மாகாணசபையில் விசாரணை முன்னெடுக்கப்படமாட்டாதெனவும் சவால் விடுத்துள்ளார்.