September 7, 2024

பார்த்தவுடன் படப்பிடிப்பு தளத்தில் டேனியை கட்டிபிடித்த சரத்குமார் மகள்..

போடா போடி படத்தின் மூலம் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளா அறிமுகமாகி தற்போது குணச்சித்திர வேடங்கள், வில்லி வேடங்களில் நடித்து வருகிறார்.

கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

பி.ஜி. முத்தையா தயாரித்து சந்தான மூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் டேனி. இப்படத்தில் நடிகர் வரலட்சுமி துப்பறியும் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஹீரோ பிங்கி என்ற நாய் தான். கொலை சம்பந்தமான கதையை துப்பு துலக்கும் பணியில் அந்த நாயுடன் நடிகை வரலட்சுமி நடித்துள்ளார்.

இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதையே நடித்துள்ளேன். நாயுடன் நடித்தது பிடித்தமான ஒரு விஷயம். படப்பிடிப்பு தளத்தில் பிங்கியை பார்த்தவுடன் முதலில் போய் கட்டிபிடித்துவிட்டேன். அதை பற்றியே தான் கேட்டுகொள்வேன்.

ஹூட்டிங்கில் டிரைனர் என்ன சொல்கிறாரோ அந்த காட்சிகளை சரியாக செய்து கொடுத்தது என்று கூறியுள்ளார்.