September 13, 2024

தேர்தலுக்குப்பின் சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை – மாவை

எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் தொடர்பில் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரம் பல பாதிப்புக்களைக் கொண்டு வரும்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சிக்கு முறைப்பாடுகள் கிடைத்தால் தேர்தலுக்குப் பின்னர் கட்சி அது பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்

தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.

“கட்சிக்குள் இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ள சுமந்திரன், சிறிதரன் தொடர்பில் எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கை எடுக்கும். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரம் பல பாதிப்புக்களைக் கொண்டு வரும்.” என்றார்.