April 19, 2024

இவர்களெல்லாம் அமெரிக்காவிற்குள் நுழைய தடை..! பெரிய அடியாக அமைந்த அறிவிப்பு

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ஐ.சி.இ) வெளிநாட் மாணவர்களுக்கா புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

அதாவது வரவிருக்கும் பள்ளி காலத்தில் புதிய வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் வகுப்புகளை முழுமையாக ஆன்லைனில் எடுக்க திட்டமிட்டிருந்தால் அவர்கள் நாட்டிற்குள் நுழைவது தடுக்கப்படுமாம்.

கல்லூரி அதிகாரிகளுக்கு ஐ.சி.இ அனுப்பிய குறிப்பில், மார்ச் 9 ஆம் தேதி வரை ஏற்கனவே பதிவு செய்யப்படாத புதிய மாணவர்கள் ஆன்லைனில் படிப்புகளை படிக்க விரும்பினால் விசாக்களைப் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களை நாடு கடத்துவதாக அச்சுறுத்திய டிரம்ப் நிர்வாகக் கொள்கையை முறியடிக்க நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தக் கொள்கை கல்லூரிகளுக்கு ஒரு அடியாக அமைந்துள்ளது.

அந்த விதி, கொரோனா பரவுதற்கு மத்தியில் மாணவர்களின் பல்கலைக்கழகங்கள் முழு ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், அமெரிக்காவில் உள்ள அனைத்து வெளிநாட்டு மாணவர்களையும் புதிய பள்ளி ஆண்டில் முழுமையாக ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதைத் தடுக்க முயன்றது,