September 6, 2024

கோத்தா வெருட்டல் என்னிடம் செல்லாது: சி.வி?

தமிழ் மக்களை வெருட்டிப் பணிய வைக்கலாம் என்று அரசாங்கம் நினைத்தால் தயவு செய்து உங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதியிடமும் மற்றையவர்களிடமும் கேட்டு வைக்கின்றேன். இவ்வாறான செயல்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்று தெரிந்து கொண்டே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். ஒரு வேளை சம்பந்தரின் அரசியலை நடத்தியிருந்தால் என்னை எவரும் கேள்வி கேட்க வந்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் மக்களுடன் சேர்ந்திருப்பவன். எனது இணக்க அரசியல் மக்களுடன் தான். ஆகவே தப்பாக எங்களை மதிக்காதீர்கள் என்று அரசாங்கத்தினரை நான் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்.
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் இன்று இரவு நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தினில் சி.வி.விக்கினேஸ்வரன் இதனை தெரிவித்தார்.
‚மலையக தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் மற்றைய சமூகங்களுடன் கைகோர்த்துச் செல்லும் போது வடக்கு கிழக்கு மக்கள் மட்டும் பிரிந்து நிற்பதற்குக் காரணம் என்ன?
அதற்குப் பதிலாக நான் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் தனித்தவம் பற்றிக் கூறி நாம் தொடர்ந்து சரித்திர காலத்திற்கு முன்பிருந்து வடக்கு கிழக்கை எமது பாரம்பரிய வாழ்விடங்களாகக் கொண்டிருப்பதையும், பௌத்தம் முதன் முதலில் தமிழர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டதென்றும், அப்போது சிங்களமொழி வழக்கத்திற்கு வந்திருக்கவில்லை என்றும் அம்மொழி கி.பி. 6ம், 7ம் நூற்றாண்டளவில்த்தான் மொழியாகப் பரிணமித்தது என்றும் பல விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். சிங்களவருக்கு தவறான வரலாறு அவர்கள் பற்றி அவர்களுக்கு புத்த பிக்குகள் போன்றவர்களால் போதிக்கப்பட்டு வந்துள்ளது என்றும் கூறியிருந்தேன்.
நாங்கள் ஒரு பாரம்பரியத்தை நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதால் நாம் எமது வடக்கு கிழக்கில் சுயாட்சி கேட்டுள்ளோம் என்றும் எமது பாரம்பரிய மற்றும் மனித உரிமைகள் எமக்குக் கையளிக்கப்பட்டால் மற்ற இனங்களுடன் கைகோர்த்துப் பயணிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் அதில் கூறியிருந்தேன்.
நான் எழுத்தில் அனுப்பி சென்ற டிசெம்பர் மாதத்தில் பத்திரிகைகளில் வெளிவந்த கேள்வி பதில் பற்றி ஏழு மாதங்களின் பின்னர் தேர்தலுக்கு முன்னர் காவல்துறையினை அனுப்பிக் கேட்டது விந்தையாக உள்ளது. தமிழ் மக்களை வெருட்டிப் பணிய வைக்கலாம் என்று அரசாங்கம் நினைத்தால் தயவு செய்து உங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று மாண்புமிகு ஜனாதிபதியிடமும் மற்றையவர்களிடமும் கேட்டு வைக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
அடுத்து மகிந்த அவர்களின் கூற்றுப் பற்றி. பிரபாகரன் தனி நாடு கோரியதைப் பற்றியும் நாங்கள் சமஷ;டி கோருவது பற்றியும் அறியாமலா மகிந்த அவர்கள் அரசியலில் 50 வருடங்கள் கழித்துள்ளாரா? சட்டக் கல்லூரியில் பிரிவினை பற்றியும் சமஷ;டி பற்றியும் எவரும் உங்களுக்கு எடுத்துச் சொல்லவில்லையா?
இரண்டாவதாக மகிந்தர் ஒரு விடயத்தை மனதில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தம்மை தாமே ஆள்வதென்பது அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் ஒரு சட்ட உரித்து. சர்வதேசச் சட்டப் படி வடகிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள். அதைக் கொடுக்க வேண்டியது மகிந்தரின் கடப்பாடு. தமிழ் மக்களின் உரிமைகளை நாம் தரமாட்டோம் என்று அவர் கூறுவது ஒரு வித போக்கிரித்தனமான கூற்று. அப்படிக் கூறினால்த்தான் சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள் என்றால் பதவிக்கு வந்தபின் உங்கள் கூற்றுக்களை மாற்றிக் கொள்வீர்களா என்று அவரிடம் கேட்க விரும்புகின்றேன்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வினை காண்பதற்கு நாம் முன்வைக்கும் யோசனைகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவானதாகவும் முரண்பாட்டு கோட்பாடுகளுக்கு அமைவானதாகவுமே இருக்கின்றன. இவை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெற்றிகரமாக பிரயோகிக்கப்பட்ட நடைமுறையில் இருக்கும் வழிமுறைகளே. தமிழ் மக்களின் அடையாளத்தையும் இருப்பையும் அழிப்பதையே குறியாகக்கொண்டு செயற்;படும் இலங்கை அரசு ஒருபோதும் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும் வழங்கப்போவதில்லை என்பதையும் சர்வதேச உத்தரவாதம் இன்றிய எந்த உடன்படிக்கையையும் இலங்கை அரசு மதிக்கப்போவதில்லை என்பதையும் யுத்தத்துக்கு முந்திய வரலாறும், யுத்த கால வரலாறும், யுத்தத்துக்கு பிந்திய வரலாறும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றன. ஆகவே தான் ஒரு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு சர்வதேச சமுகத்தை நாம் கோருகின்றோம். அதேபோல, இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது?  ஏன் தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பவற்றை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு நிரந்தர தீர்வு ஏற்படுவதற்கு அவர்களும் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்காகவே சர்வதேச விசாரணையை நாம் கோருகின்றோம்.
ஆகவே, தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்ற விதியை தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக ஆவணி 5, 2020  திகதி அன்றைய பாராளுமன்ற தேர்தல் அமைகிறது. உங்கள் வாக்குகள் தான் அந்த விதியை எழுதப்போகின்றன. நீங்கள் எழுதும் விதி வடக்கு- கிழக்கில் ‚மீனாட்சி‘ மலர்வதற்கானதாக இருக்கட்டும்.
 வல்வெட்டித்துறை மண்ணில் இத்தனை நூற்றுக்கணக்கான உங்கள் முன் உரையாற்றும்பொழுது எனக்குள்ளே இருக்கும் வீர உணர்வும் விடுதலை உணர்வும் அதிகரித்திருப்பதாக உணர்கின்றேன். இந்த மண்ணுக்கு தனியான ஒரு வரலாறு இருக்கிறது. ஒரு மகிமை இருக்கின்றது. ஒரு புனிதம் இருக்கிறது. ஏராளமான சரித்திர வீரர்களை உருவாக்கிய மண் இந்த மண். இவர்களின் வீரத்தை, ஒழுக்கத்தை, கொள்கை உறுதியை  தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்கள் கூட இன்றும் குறிப்பிடுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர்களுக்கு எதிராகப் போரிட்ட இலங்கையின் உயர் இராணுவ தளபதிகள் கூட தமது மரியாதையை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். ஆகவே இந்த மண்ணில் இருந்து என் மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். தயவுசெய்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இம்முறை பகிஷகரித்து மாற்றுகட்சியான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு வாக்களியுங்கள் எனவும் நீPதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.