September 13, 2024

பிரித்தானியா துஷ்பிரயோக உதவி மையத்தை அதிர வைத்த அழைப்புகள்! ஊரடங்கின் போது நேர்ந்த துயரம்

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவில் உள்ள தேசிய உள்நாட்டு துஷ்பிரயோக உதவி மையத்திற்கு 40,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் தொடர்புகள் செய்யப்பட்டன என புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பெரும்பாலும் பெண்கள் உதவி கோரி தேசிய உள்நாட்டு துஷ்பிரயேக உதவி மையத்திற்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில், அழைப்புகள் மற்றும் தொடர்புகள் வழக்கத்தை விட கிட்டத்தட்ட 80% அதிகமாக இருந்தன என்று உதவி மையத்தை நடத்தும் தொண்டு நிறுவனம் கூறுகிறது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், பெண்கள் துஷ்பிரயோகம் செய்பவர்களிடமிருந்து தப்பிக்க அடைக்கலம் தேடும் இடங்கள் அதிகரித்து வருவதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கின் போது உள்நாட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களுக்கு உதவிக்கு முன்னுரிமை அளித்ததாகவும், முக்கிய ஆதரவு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் அரசாங்கம் கூறுகிறது.