September 13, 2024

சம்பந்தன் ஐயா ஈழ தமிழரின் அரசியல் தலைவராக இருக்க குறைந்தது என்ன செய்திருக்க வேண்டும்.

1.நீங்கள் வாழ மிகப்பெரிய பங்களாவும் அந்த பங்களாவிற்கு வர்னம் பூச 4கோடிகள் அரசு நிதி ஒதுக்கிய போது எனக்கு இந்த பணம் வேண்டாம் எனது தமிழ் மக்கள் வீடு இல்லாமல் வாழ்கிறார்கள் இந்த 4கோடியில் 40வீடுகளை கட்டி கொடுங்கள் என்று ஒரு வார்த்தை கூறியிருந்தால் நீங்கள் தான் எங்கள் தலைவர்…
2.எதிர்கட்சி தலைவர் பதவி மூலமாக வந்த 25 உதவியாளர்களில் ஒரு 10 முன்னாள் போராளிகள் அல்லது மாவீரர் குடும்பங்களை சேர்ந்த வர்களுக்கு வழங்கி அவர்களையும் வாழ வைத்திருந்தால் நீங்கள் தான் எங்கள் தலைவர்
3. எதிர் கட்சி தலைவர் பதவி மூலமாக பொலிஸ் மா அதிபர் இராணுவ தளபதியை அழைத்து காணமல் போன வர்களுக்கு என்ன நடந்தது என்று கேள்வி கேட்டிருந்தால்… அரசியல் கைதிகள் விடுதலையில் ஏன் இவ்வளவு காலமாக வழக்கு தொடராமல் இருக்கீறிர்கள் என்று கேள்வி கேட்டிருந்தால் நீங்கள் தான் எங்கள் தலைவர்
4.தனக்கு பின்னர் ஒரு தலைவரை அல்லது ஒரு பிரதி தலைவரையாவது தமிழ் மக்களுக்கு அறிவித்து நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி ஒரு ஆலோசகராக செய்யப்பட்டிருந்தால் நீங்கள் தான் தலைவர்
5.தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் தமிழ் அரசு கட்சியை முன்னிறுத்தி ஏனைய இரு கட்சிகளையும் பாகுபாடு காட்டி நடத்துவதை தடுத்து சமநிலை பேணி இருந்தால் நீங்கள் தான் எங்கள் தலைவர்…
6.சுரேஸ் பிரேமச்சந்திரன் விக்கினேஸ்வரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனந்தி சசிதரன் சிறீஸ்கந்தராஜா சிவாஜிலிங்கம் என்று ஏராளமானோர் வெளியேறி பிரிந்து நின்ற போது அவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு ஒற்றுமைக்காக விட்டுகொடுப்பிற்களை செய்திருந்தால் நீங்கள் தான் எங்கள் தலைவர்
7.கிழக்கு மாகாண சபையில் எந்த ஒரு நிபந்தனை இல்லாமல் தூக்கி கொடுத்த மாகாண சபையை அவ்வாறு செய்யாமல் ஒரு தெளிவான நிபந்தனை உடன் கொடுத்து பல காணிகளை இனவாத முஸ்லிம் அரசியல்வாதிகள் சூறையாடுவதை தடுத்து நிறுத்தி இருந்தால் நீங்கள் தான் எங்கள் தலைவர்……
, 8. மூன்று வருடங்களை கடந்து காணாமல் ஆக்கப்படோரின் உறவுகள் போராடிக்கொண்டிருக்கும் போது ஒரு தடவை யாவது அவர்களை சந்தித்து குறைந்தது ஒரு ஆறுதல் வார்த்தையாவது கூறியிருந்தால் நீங்கள்………
சிந்தனை தூண்டல் –

முல்லை மதி